மகளிர் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கல்
தம்மம்பட்டி மகளிர் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கல்;
By : King 24x7 Website
Update: 2024-01-09 08:32 GMT
தம்மம்பட்டி மகளிர் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கல்
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தம்மம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தம்மம்பட்டி நகர திமுக செயலாளர் ந.சண்முகம் தலைமை வகித்தார். 3-ஆவது வார்டு கவுன்சிலர் ஏ.நடராஜ் முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியை கஸ்தூரி வரவேற்றார். இதில், 163 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன இந்நிகழ்வில், நகர திமுக துணை செயலாளர் கலியவரதராஜ், வார்டு உறுப்பினர்கள் நித்யா செந்தில்குமார். கே.செந்தில், ரேவதி ராஜகோபால், செல்வி பெருமாள். கட்சி நிர்வாகிகள் சோடா வெங்கடேஷ், ஐ.டி. பிரிவு சுரேஷ். அசேன் ராபின்ஜெரோம், முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.