இலவச சைக்கிள்கள் வழங்கல்

செய்யாறு அரசு மேல்நிலைப்பள்ளியில் 562 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

Update: 2024-01-03 09:13 GMT

செய்யாறு அரசு மேல்நிலைப்பள்ளியில் 562 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன. 

செய்யாறு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 562 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் முன்னிலையில் வெயிலில் மயங்கிய மாணவி திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன் தலைமை தாங்கினார்.

பள்ளி தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தார்.பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவிக்குமார் வரவேற்பு நிகழ்த்தினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 562 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி வழங்கினார். நிகழ்ச்சியில் அரசு சார்பில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி முதல் பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தி வருகின்றனர் என்றார். இந்நிலையில் காலை முதல் நீண்ட நேரம் வெயிலில் மாணவிகள் கால் கடுக்க நின்றிருந்தனர். இதனால் ஓரு மாணவி மயக்கம் அடையும் நிலையில் அருகில் இருந்த மாணவிகள் இருவர் அந்த மாணவியை கைத்தாங்கலாக அழைத்து சென்று ஆசுவாசப்படுத்தினர்.

இதனை தொடர்ந்து அந்த மாணவி மயக்கம் தெளிந்து அமர்ந்து இருந்தார். பள்ளி விழாக்களில் செல்லும் போது நீண்ட நேரம் மாணவர்கள் காக்க வைத்து நிகழ்ச்சிகளை நடத்தாமல் குறித்த நேரத்தில் மாணவர்கள் நிகழ்ச்சியை அரசு நடத்த முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News