இலவச சைக்கிள்கள் வழங்கல்

வந்தவாசியில் 11 பள்ளிகளை சேர்ந்த 1198 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

Update: 2024-01-03 13:24 GMT

 வந்தவாசியில் 11 பள்ளிகளை சேர்ந்த 1198 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

வந்தவாசியில், மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்-எம்.எஸ்.தரணிவேந்தன், எம்எல்ஏ அம்பேத்குமார் பங்கேற்பு. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில், செய்யாறு கல்விமாவட்டம், வந்தவாசி ஒன்றிய பள்ளி மாணவ, மாணவி களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் து.கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. வந்தவாசி திமுக நகர செயலாளர் எ.தயாளன் ,நகரமன்ற துணைத் தலைவர், அன்னை க.சீனிவாசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குடியரசு, உதவி தலைமை ஆசிரியர் ஜி.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பி. ஞானசம்பந்தம் அனைவரையும் வரவேற்றார். இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட முன்னாள் ஒன்றிய குழு தலைவர் எம்.எஸ்.தரணிவேந்தன்,எம்.எல்.ஏ அம்பேத்குமார் 11 பள்ளிகளை சேர்ந்த 1198 மாணவ, மாணவி யருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் பேசுகையில், . எப்பொழு தெல்லாம் திமுக ஆட்சி நடைபெறுகிறதோ, அப்பொழுது மாணவர்க ளுக்கும் பொற்கால ஆட்சி. முதன் முதலில் மாணவர்களுக்கு இலவச பேருந்து பாஸ் கொடுத்தது கலைஞர் ஆட்சி. 8-ஆம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமண உதவி திட்டம் வழங்கிய அரசு திமுக அரசு. கல்லூரி மேற்படிப்பை தொடர்வதற்காக புதுமை பெண் திட்டம் மூலமாக மாதம் 1000 ஊக்கத்தொகை வழங்கும் அரசு தலைவர் ஸ்டாலின் அரசு என்று பேசினார்.செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர் எம்.எஸ் தரணிவேந்தன் பேசுகையில் பல சமுதாய முன்னோடிகளை உருவாக்கிய பள்ளி இது. கலைஞர்.கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக மாணவர்களுக்கு இவவச புத்தகம், கல்லூரி மாணவர் உதவித்தொகை திட்டங்களை தந்தார்.கிராமப்புற மாணவர்கள் தொலைதூரங்களில் இருந்து நடந்துவந்து கல்வி பயிலும் காலம் ஒன்றிருந்தது. சில மாணவர்கள் உடல்நலிவடைந்தவர்கள் கூட இருப்பர்.அவர்கள் பள்ளிக்கு வருபவர்கள் சோர்வடைந்து விடவும் கூடும்.பின்னர் அவர்கள் எப்படி கல்வியில் கவனம் செலுத்த முடியும்.அதற்காக திமுக அரசு விலையில்லா சைக்கிள்களை கொடுத்து வருகிறது. மாணவர்களுக்கு மனிதநேயத்தை கல்வி கற்றுக் கொடுக்கும்.படிப்பு மட்டுமே உயர்வைத் தந்துவிடாது. ஒழுக்கம், உழைப்பு, தன்னம்பிக்கை உயர்வை தரும். இந்த அரசு மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்குவதில் முனைப்புடன் உள்ளது..எனவே நீங்கள் ஊக்கத்துடன் படித்து முன்னேற வேண்டும் என பேசினார்.இதையடுத்து, வந்தவாசி அரசு ஆண்கள், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், மடம் , பெரணமல்லூர் ஆண்கள் மற்றும் பெண்கள், மேல்நிலைப் பள்ளிகள், தூய நெஞ்ச மகளிர் மேல்நிலைப்பள்ளி சன்னதி மேல்நிலைப்பள்ளி இரும்பேடு, மருதாடு, கீழ்க்கொடுங்காலூர், கீழ்க்கொவளைவேடு மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 1198 மாணவ மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்களை பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில், திமுக அவைத் தலைவர் நவாப்ஜான்,ஒன்றிய திமுக செயலாளர்கள் டிடி ராதா, தலைமை ஆசிரியர்கள் பி பத்மாவதி, வி.ராம் குமார்,எஸ் ஜான்கென்னடி, ஐ. ராம கிருஷ்ணன், பி.பூங்குழலி , எஸ். மரிய சர்பிரசாதம், நகர்மன்ற உறுப்பினர் கிஷோர்குமார், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப் பாளர் மதன்குமார்,வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டி.கே.அருள்மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டவர் கலந்து கொண்டனர்.பெற்றோர் ஆசிரியர் கழகத்துணைத்தலைவர் அப்துல் ரசூல் நன்றி கூறினார்.

Tags:    

Similar News