இலவச சைக்கிள்கள் வழங்கல்
மருங்காபுரி அருகே பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.;
Update: 2024-01-04 02:01 GMT
மருங்காபுரி அருகே பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் மருங்காபுரி அருகே உள்ள ஊத்துக்குழி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாணவ, மாணவிகளுக்கு மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது வழங்கினார். இவ்விழாவில் ஒன்றிய பெருந்தலைவர் பழனியாண்டி, திமுக ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா, ஊராட்சி மன்ற தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.