விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

பேராவூரணியில் நடந்த விழாவில் 1408 மாணவ மாணவிகளுக்கு ரூ.67.95 லட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

Update: 2024-01-12 04:27 GMT

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசு, பள்ளிக்கல்வித்துறை சார்பில், விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.மதன்குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்டக் கல்வி அலுவலர் மெ.கோவிந்தராஜ் வரவேற்றார்.  தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் ச.சு. பழனிமாணிக்கம், மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி விழா பேரூரையாற்றினார்.  இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை),  நா.அசோக்குமார் (பேராவூரணி) முன்னிலை வகித்தனர். 

திமுக மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர், முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் ராஜரெத்தினம், பேராவூரணி வடக்கு ஒன்றியச் செயலாளர் இளங்கோவன், நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சுவாதி காமராஜ், பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், துணைத் தலைவர் கி.ரெ.பழனிவேல், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வி.ஏ.டி.சுந்தர்ராஜ், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர். நிறைவாக, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சி மாரிமுத்து நன்றி கூறினார்  விழாவில், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆவணம், இடையாத்தி, கரிசவயல், திருச்சிற்றம்பலம், பள்ளத்தூர், பெருமகளூர், குருவிக்கரம்பை, மல்லிப்பட்டினம், மணக்காடு அரசு மேல்நிலைப்பள்ளிகள், புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை அரசு உதவி பெறும் பள்ளி உள்ளிட்ட 12 பள்ளிகளைச் சேர்ந்த 668 மாணவர்கள் 740 மாணவிகள் என மொத்தம் 1,408 பேருக்கு, ரூபாய் 67 லட்சத்து 95 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்புள்ள விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News