அரசுப் பள்ளியில் விலை இல்லா சைக்கிள் வழங்கல்
மல்லசமுத்திரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை திருச்செங்கோடு எம்.எல்.ஏ., வழங்கினார்.
Update: 2024-01-03 11:53 GMT
மல்லசமுத்திரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று, தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் மாணிக்கம் தலைமை தாங்கி, அனைவரையும் வரவேற்றார். டவுன் பஞ்., தலைவர் திருமலை முன்னிலை வகித்தார். திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கி, உரையாற்றினார். முன்னதாக, மாணவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து, மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் சொற்படிகேட்டு நடக்க வேண்டும் என அறிவுறுத்தினார். ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர்கழக நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்திற்குட்பட்ட, காளிப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவில் ரூ.18.30 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கும், டாக்டர் சுப்ராயன் சாலையில், 10.72லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் காண்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கும், தியாகி குமரன் கைத்தறி சங்கம் பின்புறம் ரூ.3.90லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படும் காண்கிரீட்சாலை அமைக்கும் பணிக்கும், பள்ளிப்பட்டி சாலையில் ரூ.3.53லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படும் காண்கிரீட் சாலைபணி என மொத்தம் ரூ.36.45லட்சம் மதிப்பில் நடக்க இருக்கும் பணிகளுக்கு பூமிபூஜை செய்தார். அரசுஅதிகாரிகள், கட்சிநிர்வாகிகள், மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.