மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைத்தீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 3.40 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை கேட்பு கூட்டத்தில் ரூபாய் 3.40 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 14 பேருக்கு மொத்தம் ரூபாய் 3.10 லட்சத்தில் காசோலைகளை ஆட்சியர் வழங்கினார்.
மேலும் 3 மாற்று திறனாளிகளுக்கு தலா ரூபாய் 10,000 மதிப்பில் மூன்று சக்கர வாகனங்களும் வழங்கப்பட்டன. மக்கள் குறைகேட்பு நாளில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 349 கோரிக்கை மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து அது குறித்து விவரங்களை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா. செல்வி, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்கள் பே. வே. சரவணன், ஆர். ரம்யா தேவி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துறை ஆட்சியர் ஆர். சோபனா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமீர் பாஷா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் உள்ளிட்ட ஒரு பங்கேற்றனர்.