துண்டு பிரசுரம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

ஒட்டன்சத்திரத்திரம் பகுதியில் வாக்குப்பதிவின் அவசியம் குறித்து சுவரொட்டி, துண்டு பிரசுரம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.;

Update: 2024-04-02 05:47 GMT
  • whatsapp icon

ஒட்டன்சத்திரத்திரம் பகுதியில் வாக்குப்பதிவின் அவசியம், தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா என்ற தலைப்பில் சுவரொட்டி, துண்டு பிரசுரம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் காமராஜர் காய்கறி மார்க்கெட்டில் தேர்தல் விழிப்புணர்வு கோலமிட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இதில் தேர்தல் துணை வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், வட்ட வழங்கல் அலுவலர் பிரபுசங்கர், துணை வட்டாட்சியர் ராமசாமி, வருவாய் ஆய்வாளர் செல்வமங்கை, கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ், கிராம உதவியாளர்கள் விஜயபாஸ்கரன், பைசல் முகம்மது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News