ரயில்வே மேம்பாலம் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

சோத்துப்பாக்கத்தில் உள்ள செய்யூர் - வந்தவாசி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-02-07 08:24 GMT
ரயில்வே கேட் 
செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு ரயில்வே சந்திப்பு - மேல்மருவத்தூர் இடையிலான இரயில் பாதையில் ரயில்வே கேட் LC 74 சோத்துப்பாக்கம் செய்யூர் -  வந்தவாசி சாலையில் அமைந்துள்ளது. இந்த ரயில்வே கேட்டை தினசரி நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் கடந்து செல்கிறது. மேலும் பள்ளி,கல்லூரி வேலைக்கு மற்றும் மருத்துவமனை அவசர தேவைகளுக்காக பொதுமக்கள் தினசரி இந்த ரயில்வே கேட்டை கடந்து செல்கின்றனர். இந்த இருவழி ரயில் பாதையில் ரயில்கள் வருவதை ஒட்டி அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே இந்த ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

Similar News