தஞ்சாவூர் - திருக்கருகாவூர் இடையே பேருந்து இயக்க பொதுமக்கள் கோரிக்கை

தஞ்சையில் இருந்து பள்ளியக்ரஹாரம் வழியாக திருக்கருக்காவூர் வரை மீண்டும் அரசு பேருந்து இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-11-09 14:45 GMT
அரசுப் பேருந்து
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தஞ்சையில் இருந்து பள்ளியக்ரஹாரம், உதாரமங்கலம், கொத்தங்குடி கோவத்தங்குடி களஞ்சேரி வழியாக திருக்கருக்காவூர் வரை அரசு பேருந்து கடந்த 1984 வரை வந்து சென்றது. பின்னர் அரசு பேருந்து நிறுத்தப்பட்டது. அதேபோன்று களஞ்சேரி வரை வந்து சென்ற 2 மினி பேருந்துகளும் கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் கொத்தங்குடி உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

கொத்தங்குடி ஊராட்சி உதார மங்கலத்தில் இருந்து 4 km தூரம் வரை நடந்து மாரியம்மன் கோவில் சென்றும், அதேபோன்று 4 கி.மீ தொலைவில் உள்ள அன்னப்பன் பேட்டை சென்று தான் பேருந்து ஏற முடியும். இதனால் மாணவர்கள் நடந்தோ, பைக்கில் செல்பவர்களிடம் லிப்ட் கேட்டோ தான் செல்கின்றனர். அரசு போக்குவரத்து கழகங்களில் வேலை பார்ப்பவர்கள் உள்பட ஆசிரியர்கள் தொழிலாளர்கள் என அனைவரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், அரசு உரிமைத்தொகை வழங்குவதை விட கிராமங்களில் பேருந்து வசதி, தரமான சாலை வசதி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தினாலே போதும். யாரும் இலவச பேருந்து பயணம் உள்ளிட்டவற்றை விரும்ப மாட்டார்கள். நிறுத்தப்பட்ட அரசு பேருந்து, மினி பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News