நீரோடை ஆக்கிரமிப்பு செய்த அமல செடிகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
தென்காசி அருகில் உள்ள குற்றாலம் மல்லிகை விடுதி அருகே உள்ள கால்வாயில் செடிகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Update: 2024-05-31 11:09 GMT
தென்காசி அருகில் உள்ள குற்றாலம் மல்லிகை விடுதி அருகே சுமார் 30 அடி அகலம் கொண்ட கால்வாய் ஒன்று குமாரர் கோவில் வரை செல்கிறது. இந்த கால்வாய் அடிபட்டாம் பாறை கால்வாய் என பெயர் உள்ளது. இந்த கால்வாய் மறித்து அமலச்செடிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர், இந்த நிலையில் அப்பகுதியில் சொகுசு விடுதிகளில் கழிவுநீர் தேங்கி உள்ளது . இது குறித்து முன்னாள் ராணுவ உயர் அதிகாரி கருப்பசாமி என்பவர் அதிகாரிகளுக்கு புகார் அளித்து அமலைச் செடி ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை வைத்தனர்.