பாதையை மறித்து தண்ணீர் தொட்டி - அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

பள்ளபட்டியில் பொது பாதை நடுவே அமைக்கப்பட்ட சின்டெக்ஸ் டேங்க் தொட்டியை நகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Update: 2024-04-05 05:04 GMT

 கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சி நிர்வாகம் பொதுப் பாதை நடுவே சின்டெக்ஸ் டேங்க் தொட்டி அமைக்கும் பணியை நிறுத்த கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, பள்ளப்பட்டி நகராட்சி பகுதியில் அமைந்துள்ள ஷா நகர் இரண்டாவது கிராஸ் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. பள்ளப்பட்டி நகராட்சி சார்பில் 6 அடி பொதுப் பாதை நடுவே ஆக்கிரமிப்பு செய்து, சின்டெக்ஸ் டேங்க் தொட்டி அமைக்கப்பட்டு பைப்லைன் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சார்பாக ஹபீப் ரகுமான் என்பவர் செய்தியாளரிடம் தெரிவிக்கும்போது, பள்ளப்பட்டி நகராட்சி தலைவரை நேரில் சந்தித்து பொது பாதையை ஆக்கிரமிப்பு செய்து சின்டெக்ஸ் டேங்க் தொட்டி அமைத்துள்ளதால், நடந்து செல்வதற்கு பாதை இல்லை எனவும், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இதுதான் முக்கிய வழி எனவும், இதனால் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், உடனடியாக குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்த நிலையில், இதுவரை சின்டெக்ஸ் தொட்டி அகற்றப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர்.

Tags:    

Similar News