பல்லாங்குழி சாலையை சீரமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை!

கீழாநெல்லி கோட்டை- உசிலம்பட்டி, மேல்நிலைப்பட்டி வழித்தடத்திலுள்ள பாம்பாறு தரைமட்ட பாலத்தில், ரோடு குண்டும் குழுயுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

Update: 2024-05-28 06:34 GMT

கீழாநெல்லி கோட்டை- உசிலம்பட்டி, மேல்நிலைப்பட்டி வழித்தடத்திலுள்ள பாம்பாறு தரைமட்ட பாலத்தில், ரோடு குண்டும் குழுயுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

அரிமளம் ஒன்றியம் கீழாநெல்லி கோட்டையில் இருந்து உசிலம்பட்டி, மேல்நிலைப்பட்டி வழியாக பூனையின் குடியிருப்புக்கு செல்லும் ஐந்து கிலோ மீட்டர் தூரத் தார்சாலை அமைந்துள்ளது. இதன் குறுக்கே பாம்பாறு செல்கிறது இங்கு தரைமட்ட பாலம் உள்ள நிலையில் மழைக்காலத்தில் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டதால் கிராம மக்கள் கோரிக்கையை தொடர்ந்து மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அந்த பணி முழுமையாக நிறைவடையாததால் சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

கோடை மழை காரணமாக சாலை பள்ளங்களில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்பதால் இருசக்கர வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். அரிமளம், கும்பங்குடி, பூனையன்குடியிருப்பு, மேல்நிலைப்பட்டி, உசிலம்பட்டி உள்பட 16 கிராம மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ஏராளமான மாணவ மாணவிகள் கீழாநிலைக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இந்த சாலை வழியாக சென்று வருகின்றன. பள்ளி திறக்கப்படும் முன்பு சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News