மனல்மேல்குடி அருகே வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
மனல்மேல்குடி அருகே வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மணமேல்குடியில் தாலுகா அலுவல கம், அரசு மருத்துவமனை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், மின்வாரிய அலுவலகம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன.
இவற்றுக்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், அலுவலர்கள் வந்து செல்கின்றனர். இதுதவிர வர்த்தக நிறுவனங்களுக்கும் நுாற்றுக்கணக்கானோர் வேலைக்கு வருகின்றனர். இதனால் காலை, மாலை நேரங்களில் மணமேல்குடி நகரில் தண்டலை4 ரோடு, சந்தை பேட்டை உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேகமாக செல் லும் வாகனங்களால் மாணவர்கள் அச்சத்துடன் சாலையை கடந்துசெல்ல வேண்டியுள்ளது. அவ்வப்போது சிறிய அளவில் விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.
இதை தவிர்க்க கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்களை கட் டுப்படுத்த வேண்டும், பள்ளி தொடங்கும் மற்றும் முடிவடையும் நேரங்களில் முக்கிய இடங்களில் போக்குவரத்து போலீசாரை பணியில் அமர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.