கள்ளக்குறிச்சியில் நாளை பொது விநியோக திட்ட முகாம்
Update: 2023-11-17 04:03 GMT
கள்ளக்குறிச்சி வட்டத்தில் பிப்ரவரி மாதத்திற்கான பொது விநியோக திட்ட சிறப்பு முகாம் நாளை 11ம் தேதி சனிக்கிழமை கள்ளக்குறிச்சி குடிமைப்பொருள் தனி தாசில்தார் அலுவலகத்தில் நடக்கிறது.இந்த முகாமில் மின்னணு குடும்ப அட்டை தொடர்பான பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், முகவரி திருத்தம், புகைப்படம் மாற்றம் மற்றும் நகல் குடும்ப அட்டை மனுக்கள் பெறப்படுகிறது. மனுக்களின் மீது உரிய ஆவணங்களின் அடிப்படையில் சரிசெய்து ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்கப்பட உள்ளது. மின்னணு குடும்ப அட்டைகளில் குடும்ப தலைவரின் புகைப்படச் மாற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமில் புகைப்படம் உடனடியாக பதிவேற்றம் செய்யப்படும் என்று குடிமை பொருள் தனி தாசில்தார் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.