பொது விநியோக திட்ட குறைதீர் முகாம்

மண் மங்கலத்தில் பொது விநியோக திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-01-21 05:27 GMT
பொது விநியோகத் திட்டத்தில், ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள் குடும்ப அட்டையில் உள்ள குறைபாடுகளை நீக்கும் முகாம் மாதந்தோறும் இரண்டாம் சனிக்கிழமை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த மாதம் இரண்டாவது சனிக்கிழமை அன்று பொங்கல் திருநாள் வந்ததால், இன்றைய தினம் நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதன் பேரில், கரூர் மாவட்டம் மன்மங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் இன்று வட்ட வழங்கல் அலுவலர் மாலதி தலைமையில் நடைபெற்றது. மன்மங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் இன்றைய தினம், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், புதிய கார்டு விண்ணப்பித்தல் உள்ளிட்ட குறைகள் குறித்து மனுக்கள் அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட வட்ட வழங்கல் அலுவலர் அதற்கான தீர்வுகளை கண்டு, இன்றைய தினமே குடும்ப அட்டைதாரர்களின் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டது.
Tags:    

Similar News