நாளை பொது விநியோக திட்ட குறைதீர் முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பொது விநியோக திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெறுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-09 06:19 GMT

பைல் படம் 

காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் தாலுகா கீழம்பி, உத்திரமேரூர் தாலுகா பாலேஸ்வரம், வாலாஜாபாத் தாலுகா இளையனார்வேலுார், ஸ்ரீபெரும்புதுார் தாலுகா மாம்பாக்கம், குன்றத்துார் தாலுகா புதுப்பேர் ஆகிய கிராமங்களில், நாளை , காலை 10:00 மணி அளவில், ரேஷன் கார்டு குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த கிராமங்களில் வசிக்கும் ரேஷன் கார்டுதாரர்கள் தங்களின் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தல், ரேஷன் கார்டு நகல் பெறுதல், மொபைல் எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல் மனு அளிக்கலாம். மேலும், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர், நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News