நாளை பொது வினியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வட்டாச்சியர் அலுவகங்களில் நாளை நடைபெறும் பொது விநியோக திட்ட குறைதீர் முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்தார்.
Update: 2024-01-19 05:03 GMT
பொது வினியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) அனைத்து தாலுகா அலுவலகத்திலும் குடிமைப் பொருள் தனி தாசில்தார், வட்ட வழங்கல் அலுவலர்களால் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட உள்ளது. இம்முகாம்களில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகலட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் தொடர்பாக முகாமில் கோரிக்கையையும், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அங்கீகாரச்சான்று கோரும் கோரிக்கை மனுவையும், பொது வினி யோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களையும், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களையும் குடும்ப அட்டைதாரர்கள் தெரிவிக்கலாம், இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பொதுமக்கள், பொது வினியோகத்திட்டம் தொடர்பான தங்களது குறைகளுக்கு தீர்வு காணலாம் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.