நாய்கள் தொல்லை... கண்டுகொள்ளாத நகராட்சி

நாய்கள் தொல்லை அதிகரிப்பால் கீழக்கரை பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அஞ்சுகின்றனர்.

Update: 2024-05-04 09:01 GMT

தெருநாய்கள் தொல்லை

ராமநாதபுரம் கீழக்கரை நகராட்சி பகுதியில் நாய்களால் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் மற்றும் கால்நடைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது வழக்கமாக உள்ளது.

 இந்த நாய்களை பிடித்து அகற்ற பல்வேறு சமூக, சமுதாய அமைப்புகள்,அரசியல் கட்சிகள் மற்றும் பல சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

நாய்கடியால் கீழக்கரை அரசு மருத்துவமனை மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைகளில் தினமும் சராசரியாக ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் உள் மற்றும் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வருவது வேதனை தரும் செய்தியாக உள்ளது. நாய்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள், சிறுவர்கள் இரவில் நடமாட அஞ்சுகின்றனர்.

எனவே, பொதுமக்கள் நலன் கருதி கீழக்கரை நகராட்சி நிர்வாகம் நாய்களை பிடித்து அரசு விதிப்படி அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News