பொதுமக்கள் குறைதீர் கூட்டம் - ஆட்சியர் பங்கேற்பு
Update: 2023-12-19 05:57 GMT
குறைதீர் கூட்டம்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெறும். அதன்படி டிசம்பர் 18 ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெற்றது. இதில் முதியோர் உதவி தொகை, இலவச வீட்டுமனை பட்டா, மாற்றுதிறனாளி உதவிதொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 359 மனுக்கள் பெறப்பட்டது. இதனையடுத்து அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா அறிவுறுத்தினார். இதில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.