காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

தர்மபுரியில் காவல்துறை சார்பில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 99 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டன.

Update: 2024-07-04 03:53 GMT

தர்மபுரி மாவட்டம் காவல்துறை சார்பில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நாட்களில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகம் நடைபெற்று வருகிறது அதன்படி நேற்று இந்த முகாம் நடைபெற்றது தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுப்பாதம் தலைமை தாங்கினார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார்.

இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 33 காவல் நிலையங்கள் இருந்து புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நிலத்தகராறு,சொத்து தகராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100 மனுக்கள் விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டது மேலும் நேற்று ஒரே நாளில் 99 மக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மேலும் 1 மனு மேல்விசாரணைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது மேலும் முகாமில் புதிதாக 42 மனுக்கள் பெறப்பட்டன இந்த மனுக்கள் அந்தந்த காவல் நிலையங்களுக்கு பரிசீலனை செய்ய அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் துணை காவல் கண்காணிப்பாளர் தேவராஜ் காவல் ஆய்வாளர்கள் அன்பழகன் பார்த்திபன் புஷ்பராணி உதவி காவல் ஆய்வாளர்கள் குப்புசாமி செல்வராஜ் உள்ளிட்ட காவல்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News