அரசு பேருந்து சர்வீஸ் முடக்கத்தால் பொதுமக்கள் சிரமம் !

ஆறுகாணி பஸ் சர்வீஸ் முடக்கம் மலையோர கிராம மக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

Update: 2024-05-02 05:40 GMT

 அரசு பேருந்து

குழித்துறை அரசு போக்குவரத்து கழக இரண் டாவது டெப்போவில் இருந்து இயக்கப்பட்டு வந்த தடம் எண் 86 பஸ் அதிகாலை 4.30 க்கு ஆறுகாணியில் இருந்து புறப்பட்டு பத்துகாணி, கடையாலுமூடு வழியாக மார்த்தாண்டம் செல்லும். அதிகாலை நேரத்தில் மலை பகுதியில் இருந்து புறப்பட்டு, மலையோர கிராமங்கள் வழியாக மார்த்தாண்டம் செல்லும் பஸ் தொழிலாளர்களுக்கும், சிறு விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும்அதிக பயன் அளித்து வந்தது. அடுத்து டிரிப்புகள் மார்த்தாண்டத்தில் இருந்து பத்துகாணி, கணபதிக்கல், ஆலஞ்சோலை பகுதிகளுக்கு இயக்கப் பட்டும் வந்தது. இரவு 9.15க்கு மார்த்தாண்டத்தில் இருந்து புறப்படும் பஸ் அருமனை, களியல், கடையாலுமூடு, ஆலஞ்சோலை, பத்துகாணி வழி யாக இரவு 10.30க்கு ஆறுகாணி வந்தடையும். மலையோர பகுதி மக்களுக்கு இந்த தடத்தில் இயக்கப்படும் கடைசி பஸ்சும் இது ஆகும். இரவு மற்றும் அதிகாலைநேரத்தில் ஆறுகாணிக்கும், மற்ற நேரங்களில் பத்துகாணி, கணபதிக் கல், ஆலஞ்சோலை பகுதிகளுக்கும் சர்வீஸ் நடத்தி வந்த பஸ் திடீரென கடந்த 5 நாட்களாக இயக்கப்பட வில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.மலை கிராம மக்களுக் கும், மலையோர பகுதி மக்களுக்கும் வசதியாக பல வருடங்களாக இயக்கப்பட்டு வந்த பஸ்சை மீண்டும் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Tags:    

Similar News