சங்கரன்கோவில் திமுக சார்பாக பொதுக்கூட்டம்

சங்கரன்கோவில் திமுக சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது

Update: 2024-03-04 02:29 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் முப்பிடாதி அம்மன் கோவில் முன்பு அமைந்துள்ள கலைஞர் திடலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் (71) பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் பொன் முத்துராமலிங்கம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் திமுக அமைச்சர் தங்கவேலு, தென்காசி வடக்கு மாவட்ட பொருளாளர் இல,சரவணன், சங்கர் குரு நகர செயலாளர் பிரகாஷ், நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News