பெரம்பலூர் நகர திமுக சார்பில் பொதுக்கூட்டம்
பெரம்பலூர் நகர திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
பெரம்பலூர் நகர தி.மு.க. சார்பில் "எல்லோருக்கும் எல்லாம்' திராவிட மாடல் நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் புதிய பேருந்து நிலையத்தில் மார்ச் 2ம் தேதி இரவு - 8 மணியளவில் நடைபெற்றது.
நகர அவைத்தலைவர் ரெங்கராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் . மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் பாரி என்கிற அப்துல்பாரூக் வரவேற்புரையாற்றினார். நகர துணைச் செயலாளர்கள் ரெங்கநாதன்,கல்பனா முத்துகுமார், நகர பொருளாளர் முகமது அசாருதீன், மாவட்ட பிரதிநிதிகள் ராஜேந்திரன், அன்பழகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கொள்கை பரப்பு இணைச் செயலாளர் - தோல் பொருட்கள் உற்பத்தி பதனிடும் தொழிலாளர் நல வாரியத்தலைவர் நெல்லிக்குப்பம் புகழேந்தி - மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் - சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். நெல்லிக்குப்பம் புகழேந்தி பேசுகையில், மகளிர் உரிமைத் தொகை, மகளிர் இலவச பேருந்து பயணம்,
அரசுக் கல்லூரி மாணவிகளுக்கு உதவித்தொகை உள்ளிட்ட தி.மு.க.ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களைப்பற்றி விளக்கி பேசினார். இந்த கூட்டத்தில் திமுக மாவட்ட முன்னாள் செயலாளர் இராஜேந்திரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன், மாவட்ட அவைத்தலைவர் நடராஜன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், சம்பத், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, இராஜ்குமார், நல்லதம்பி, தமதியழகன், ராஜேந்திரன், டாக்டர் வல்லபன், பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, பேரூர் . செயலாளர்கள் வெங்கடேசன், செல்வ லெட்சுமி சேகர் இரவிச்சந்திரன்,
ஜாகிர்உசேன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆதவன் என்கிற ஹரிபாஸ்கர், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் கருணாநிதி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர்வேணுகோபால், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் புஷ்பவள்ளி ராஜேந்திரன், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ரவி, மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் சுந்தர்ராசு, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் இராசா, தொ.மு.ச.மாவட்ட கவுண்சில் பேரவை தலைவர் குமார்,
தொ.மு.ச.மாவட்ட கவுண்சில் பேரவை செயலாளர் ரெங்கசாமி, மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகேசன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் மணிவாசகம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சிவசங்கர், வ.சுப்ரமணியன், பிரபாகரன், அருண், மாவட்ட இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர்மாரிக்கண்ணன், உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி இறுதியாக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்அப்துல்கரீம் நன்றியுரையாற்றினார்.