பொதுமக்களின் மனுக்கள் குப்பைக்கு போகவில்லை: அமைச்சர்
பொதுமக்களின் மனுக்கள் குப்பைக்கு போகவில்லை குடியேற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் மனுக்கள் குப்பைக்கு போகவில்லை குடியேற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் துரைமுருகன். வேலூர் மாவட்டம் காட்பாடியில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், பொது மக்களிடம் தமிழக முழுவதும் ஏராளமான கோரிக்கை மனுக்கள் வர பெற்றது. அதில் வேலூர் மாவட்ட மனுக்கள் பிரித்து அனுப்பப்பட்டது.
ஒரு ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் 400 பெண்கள் பிரிக்கும் பணியில் ஈடுபட்டனர். முதல் தவனையாக717 பேருக்கு காட்பாடி தொகுதியில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது தொடர்ந்து மனுக்கள் வருகிறது. நீர்நிலைகள் ஓரம் பட்டா வழங்க முடியாது. ஏனென்றால் பட்டா வழங்கும் அதிகாரி கைது செய்யப்படுவார்கள் நீதிமன்றமே தெரிவித்துள்ளது.
எனவே அரசு நிலம் . டி.சி. நிலம், மேச்சல் நிலம் என கண்டுபிடித்து சுமார் 700 பேருக்கு பட்டா வழங்கப் பட்டுள்ளது. சுதந்திரம் அடைந்தும் 75 ஆண்டுகளுக்கு பிறகும் இது என்னுடைய சொந்த நிலம் என்று எனகூற முடியவில்லை. ஆனால் இன்று திமுக ஆட்சியில் தற்போது அந்த நிலை மாற்றப்பட்டுள்ளது.
பொதுமக்களின் மனுக்கள் குப்பைக்கு போகவில்லை குடியேற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என அமைச்சர் துரைமுருகன் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.