மிகப்பெரிய சேதத்தை தடுத்த மூவருக்கு பொதுமக்கள் பாராட்டு!
தண்டவாளம் பாதிக்கப்பட்ட பகுதியை கண்டறிந்து மிகப்பெரிய சேதத்தை தடுத்த தண்டவாள பராமரிப்பாளர்கள் மூவருக்கு பொதுமக்கள் பாராட்டு
By : King 24x7 Website
Update: 2023-12-23 17:38 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ந் தேதி பெய்த அதிகனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாமிரபரணி ஆற்று வெள்ளம், பல்வேறு பாலங்களை மூழ்கடித்தபடி பாய்ந்தோடியது. நெல்லை-திருச்செந்தூர் இடையே பல்வேறு இடங்களில் ரயில் தண்டவாளங்கள் வெள்ளத்தால் அரிக்கப்பட்டு, அந்தரத்தில் தொங்கியது. திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், செய்துங்கநல்லூர் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட அரிப்பு காரணமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் சுமார் 800 பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். இதனிடையே அதிகன மழையில் தண்டவாளத்தில் ஆய்வு செய்து வெள்ளம் அரித்து தண்டவாளம் பாதிக்கப்பட்ட பகுதியை கண்டறிந்து செந்தூர் வண்டியை நிறுத்த முதற் காரணமான தண்டவாள பராமரிப்பாளர்கள் செல்வகுமார், கிருஷ்ண பெருமாள், விக்னேஷ் ஆகியோருக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.