ராசிபுரம் அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாம்

ராசிபுரம் அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது

Update: 2023-11-29 14:23 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு‌.கே.ஆர்.என்‌.இராஜேஸ்குமார் அவர்கள் இன்று (29.11.2023) நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், தொப்பப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு அரசு துறைகளின் சார்பில், 64 பயனாளிகளுக்கு ரூ.35.35 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார். குழந்தைகள் நல மையம் சார்பில் ரூ.1000/- மதிப்பீட்டில் 1 பயனாளிக்கு ஊட்டச்சத்து பெட்டகம், வருவாய்த்துறை சார்பில் ரூ.25.20 இலட்சம் மதிப்பீட்டில் 52 பயனாளிகளுக்கு பட்டா, நத்தம் பட்டா மாறுதல், பட்டா மாறுதல் ஆணை, மனைவரி தோராயபட்டா, வாரிசு சான்றுகள், வேளாண்மைத்துறை சார்பில் ரூ.7.74 இலட்சம் மதிப்பீட்டில் 10 பயனாளியிடம் நலத்திட்ட உதவிகள், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் ரூ.2.40 இலட்சம் மதிப்பீட்டில் 1 பயனாளிக்கு சோலார் மின் மோட்டார் என மொத்தம் 64 பயனாளிகளுக்கு ரூ.35.35 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்‌.இர்ஜேஸ்குமார்‌ அவர்கள் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.பொன்னுசாமி அவர்கள் முன்னிலையில் வழங்கினார். இ

ந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன் அவர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.பி.இராமசாமி அவர்கள் , மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.த.இராமலிங்கம் அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News