அநியாய கட்டண கொள்ளை அடிப்பதால் பொதுமக்கள் அவதி

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் இ சேவை மையங்களில் அநியாய கட்டண கொள்ளை அடிப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

Update: 2024-06-08 00:38 GMT

பைல் படம்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் இ சேவை மையங்களுக்கு தற்போது பொதுமக்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ மாணவிகளை சேர்ப்பதற்காக ஆதார், ஜாதி சான்றிதழ், முதல் அனைத்து அரசு ஆவணங்களை பெறுவதற்காக  செல்கின்றனர். அங்கு அரசு கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. வாங்கும் கட்டணத்திற்கு ரசீதும் வழங்கப்படுவதில்லை. அதிகாரிகள் ஆதரவுடன் இ சேவை மையம் நடத்துபவர்கள் பொது மக்களிடம் பகல் கொள்ளை அடித்து வருகின்றனர்.

எந்த அதிகாரியிடம் கூறினாலும் நடவடிக்கை எடுப்பது இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர். தமிழக முதல்வர் தலையிட வேண்டும். இ சேவை மையங்களில் எவ்வளவு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது என பலகை அனைவருக்கும் தெரியும் வகையில் வைக்க வேண்டும். பொதுமக்களிடம் வசூல் செய்யும் தொகைக்கு உரிய ரசீது வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News