சாலையில் ஓடும் கழிவு நீரால் பொதுமக்கள் அவதி

காங்கேயம் பேருந்து நிலைய கட்டண கழிப்பிடத்தின்கழிவுநீர் தேக்க தொட்டி  நிறைந்து  சாலையில் கழிவு நீர் வழிந்தோடியதால் வாகனஓட்டிகள் மற்றும் பேருந்து நிலைய பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். 

Update: 2024-03-28 01:51 GMT

காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட காங்கேயம் பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் கட்டண கழிப்பிடம் பேருந்து நிலையம் வரும் ஓட்டுனர், நடத்துனர், பயணிகள் மற்றும் அங்குள்ள கடைகளில் வேலை பார்ப்பவர்கள் என பெரும்பாலான மக்களுக்கு பயன்படும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

 இந்த நிலையில் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிடத்தின் கழிவு நீர் தேக்கத் தொட்டி நிறைந்து கழிவுநீர் வெளியேற தொடங்கியது.  சிறிது நேரத்தில் காங்கேயம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து நிலைய தினசரி கடைகள் வழியே சென்னிமலை சாலையில் வழிந்தோடி பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதி வரை சென்றது. சாலையில் வழிந்தோடிய அசுத்தமான கழிவுநீரால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதனால் அப்பகுதியில் இயங்கி வரும் காங்கேயம் நகராட்சி மற்றும் தனியாருக்கு சொந்தமான கடைகளில் உள்ள மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரிதும் சிரமத்தை ஏற்படுத்தியது. காற்றில் துர்நாற்றத்தையும், சுற்றுச்சூழல் பாதிப்பையும் ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு காங்கேயம் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிடத்தை முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்‌.

மேலும் இந்த கழிப்பிடத்தை அருகில் உள்ள காலியிடங்களில் மதுபாட்டில்கள் கிடக்கின்றது. பொதுமக்களும் பேருந்து பயணிகளும் பயன்படுத்தும் இடத்தில் எப்படி மதுபாட்டில்கள் உள்ளதா அல்லது பேருந்து நிலையம் குடிகாரர்களின் கூடாரமாக மாறிவருகின்றதா என கேள்வி எழுந்து  உள்ளது.

Tags:    

Similar News