சாலையில் செல்லும் கழிவு நீரால் பொதுமக்கள் அவதி

தர்மபுரி எஸ்பி ரோடு சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீரால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனை விரைந்து சரி செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-05-05 03:26 GMT
தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட SV ரோடு சாலை பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால் கால்வாய்கள் துண்டிக்கப்பட்டு கழிவுநீர், குப்பைக் கழிவுகள் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் இன்று காலை மழைநீர் வடிந்து குப்பைகழிவுகள், கழிவுநீர் சாலையில் செல்கிறது இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது நகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தற்போது மழைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் விரைந்து கழிவுநீர் கால்வாய் செல்லும் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவு நீர் மற்றும் மழைநீர் வடிகாலை சரி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News