மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பொது கழிப்பிட வசதி: அறிக்கை கேட்டு உத்தரவு
பொது இடங்களில் 3ஆம் பாலினத்தவர் பயன்படுத்தும் வகையில் கழிப்பிடவசதி செய்யப்பட்டுள்ளது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2024-06-08 09:20 GMT
பொது இடங்களில் 3ஆம் பாலினத்தவர் பயன்படுத்தும் வகையில் கழிப்பிடவசதி செய்யப்பட்டுள்ளது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொது இடங்களில் மூன்றாம் பாலினத்தவர்களுக்காக கழிப்பிடங்களை அமைக்க உத்தரவிட கோரி ஃபிரெட் ரோஜர்ஸ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
பொது இடங்களில் ஏற்கனவே உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பிடங்கள் பாலின சார்பற்ற கழிப்பிடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், பாலின சார்பற்ற கழிப்பிடங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் அரசு விளக்கம் அளித்துள்ளது.