வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

விருதுநகர் வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சித் தலைவர் ஜெயசீலன் வெளியிட்டார்.;

Update: 2023-10-27 12:31 GMT

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் 2023 ஐ அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான முனைவர் வீ.ப.ஜெயசீலன் வெளியிட்டார். வரும் 2024 ஜனவரி 1 ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, நடைபெறவுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்-2024-ஐ முன்னிட்டு ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலானது இன்று காலை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்பாக வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலின்படி மாவட்டத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15,30,536. ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 7,48,446, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 7,81,860 மற்றும் இதர வாக்காளர்களின் எண்ணிக்கை 230 நபர்கள் உள்ளனர்.தொடர் வாக்காளர் மேம்படுத்துதலில் புதிதாக 12,791 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 01.01.2024-ம் தேதி மற்றும் 01.04.2024, 01.07.2024, 01.10.2024 ஆகிய அடுத்தடுத்த தகுதி நாட்களைக் கொண்டு, நடைபெறவுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்-2024-ல், சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் மாற்றம் செய்ய விண்ணப்பங்கள் 27.10.2023 முதல் 09.12.2023 வரை தொடர்புடைய வாக்குச் சாவடி அமைவிட மையங்கள், வட்ட, கோட்ட, நகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறப்படும். விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாமகள் நடைபெறும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Tags:    

Similar News