திருப்பத்தூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டார். மாவட்டத்தில் மொத்தம் 9 லட்சத்து 48 ஆயிரத்து 319 வாக்காளர்கள் உள்ளனர்.

Update: 2024-01-22 07:50 GMT

வாக்காளர் பட்டியல் வெளியீடு 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

இதில் ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 4 லட்சத்து 66 ஆயிரத்து 381 மற்றும் பெண் வாக்காளர்கள் 4 லட்சத்து 81 ஆயிரத்து 808 மற்றும் மூன்றாம் பாலினம் 130 என மொத்தம் 9 லட்சத்து 48 ஆயிரத்து 319 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 15 ஆயிரத்து 427 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பொதுமக்களின் பார்வைக்காக அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், தாலுக்கா அலுவலகங்கள் மற்றும் வாக்கு சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் https://www.elections.tn.gov.in மற்றும் Voter Helpline என்ற மொபைல் செயலி வழியாகவும் வாக்காளர்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளலாம். இதில் அதிமுக, திமுக, பாமக, பிஜேபி, காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, வருவாய் கோட்டாட்சியர்கள் பானு, பிரேமலதா, தாசில்தார்கள் சிவப்பிரகாசம், குமார், நகராட்சி ஆணையர்கள் பழனி, திருநாவுக்கரசு மற்றும் தேர்தல் பிரிவு தாசில்தார் பத்மநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

Tags:    

Similar News