நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை பார்வையிட்ட கலெக்டர்
புதுக்கோட்டையில் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.;
Update: 2024-01-12 07:22 GMT
மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் காணொலிக்காட்சி வாயிலாக புதுக்கோட்டை நகராட்சி, காந்தி பூங்கா அருகில் திறந்து வைக்கப்பட்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தின் செயல்பாடுகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா பார்வையிட்டார். உடன் நகராட்சி ஆணையர் ஷியாமளா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (தொ.வ) பெ.வேல்முருகன், வட்டாட்சியர் கவியரசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.