புதுக்கோட்டை : மணமேல்குடியில் 11 செ.மீ மழை பதிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக மணமேல்குடியில் 11 செ.மீ, மிமீசலில் 5 செ.மீ, ஆவுடையார் கோவிலில் 3 செ.மீ, மழை பதிவானது.;

Update: 2024-05-17 04:19 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மாதம் கடும் வெயில் சுட்டெரித்து வந்தது. அக்னி நட்சத்திரம் தொடங்கியதும் வெப்பநிலை 110 டிகிரி பாராஹீட் வரை பதிவானது. இதனால் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து உள்ளது. இந்நிலையில் வங்க கடலில் உருவான காற்று சுழற்சி காரணமாக மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விடிய விடிய மழை பெய்து பெய்தது.

Advertisement

அதிகபட்சமாக மணமேல்குடியில் 11 சென்டிமீட்டர் மழை பதிவானது. அறந்தாங்கி, ஆவுடையார் கோவில், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது அறந்தாங்கி எல்என்புரம், சன்னதி வயல் உள்ளிட்ட பல இடங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி சேரும், சகதிகமாக மாறியதால் வாகன ஓட்டுனர்கள் அவதிக்குள்ளாய்னர். நேற்று 24 மணி நேரத்தில் பதிவு ஆன மழை அளவு விபரம் வருமாறு மணமேல்குடியில் 110, மிமீசல் 50, ஆவுடையார் கோவில் 30, அறந்தாங்கி நாகுடி 10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News