புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 9.59 லட்சத்தில் உதவிகள்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 31 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 9.59 லட்சம் மதிப்பில் ஈமச்சடங்கு நிதி, விபத்து மரண நிதி உள்ளிட்ட உதவித் தொகைகளை ஆட்சியர் வழங்கினார்.

Update: 2024-02-13 05:43 GMT


புதுக்கோட்டையை சேர்ந்த 31 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 9.59 லட்சம் மதிப்பில் ஈமச்சடங்கு நிதி, விபத்து மரண நிதி உள்ளிட்ட உதவித் தொகைகளை ஆட்சியர் வழங்கினார்.


புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 31 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 9.59 லட்சம் மதிப்பில் ஈமச்சடங்கு நிதி, விபத்து மரண நிதி உள்ளிட்ட உதவித் தொகைகளை ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா வழங்கினார். மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் இந்த உதவித் தொகைகள் வழங்கப்பட்டன. மேலும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பாம்பு கடித்து உயிரிழந்த இருவரின் வாரிசுகளுக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ. 2 லட்சத்துக்கான காசோலைகளையும் ஆட்சியர் வழங்கினார்.

குறைகேட்பு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 339 கோரிக்கை மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த விவரங்களை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். கூட்டத்தில், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் அ. ஷோபா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜி.அமீர்பாஷா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஸ்ரீதர், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Tags:    

Similar News