அரசு பகுதி நேர நூலகத்தை திறந்து வைத்த எம்எல்ஏ வை. முத்துராஜா!
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் அரசு பகுதி நேர நூலகத்தை சட்டப்பேரவை உறுப்பினர் வை. முத்துராஜா திறந்து வைத்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-14 07:34 GMT
சட்டப்பேரவை உறுப்பினர் வை. முத்துராஜா
ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் அகிலன் நூற்றாண்டு விழா நினைவாக புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் அரசு பகுதி நேர நூலகத்தை சட்டப்பேரவை உறுப்பினர் வை. முத்துராஜா திறந்து வைத்தார். தொடர்ந்து மாவட்ட நூல அலுவலர் (பொ) அ.பொ. சிவகுமாரிடம், புதிய நூலகத்தின் புரவலராக தன்னை இணைத்துக் கொண்டு அதற்கான நிதியையும் சட்டப்பேரவை உறுப்பினர் வழங்கினார். அப்போது பேசிய அவர், விரைவில் இந்த நூலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில், பெருங்களூர் ஊராட்சி மன்றத் தலைவர் சரண்யா, வார்டு உறுப்பினர்கள் விஜயலெட்சுமி, நாகராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் புதுக்கோட்டை வரலாற்றுப் பேரவைச் செயலர் மு. மாரிமுத்து நன்றி கூறினார்.