மதுரையில் நடைபெற உள்ளது பொம்மை ஜல்லிக்கட்டு: முன்னாள் அமைச்சர்

தமிழக மக்களின் உணர்வுபூர்வமானது ஜல்லிக்கட்டு என்றும் ஆனால் வருகின்ற 24ஆம் தேதி நடைபெறுவது பொம்மை ஜல்லிக்கட்டு முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-19 13:44 GMT

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் 

 மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகில் உள்ள நகரி பகுதியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி உதயகுமார் தலைமையில் அம்மா கிச்சன் சார்பில் இன்று பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உணவளித்தார்.

இதை தொடர்ந்து செய்தியாளரை சந்தித்து பேசுகையில், தொண்டர்களால் தொண்டனுக்கு வழங்கப்பட்ட மகத்தான வாய்ப்பினை ஏற்று பல்வேறு நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கினாலும் உச்ச நீதிமன்றத்தில் எதிரிகளினால் சூழ்ச்சிகளினால் மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. ஒட்டுமொத்த தமிழக மக்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

உலக முதலிட்டார் மாநாடு முதன்முதலில் அறிமுகப்படுத்தியது புரட்சித்தலைவி. முதலீட்டாளர் மாநாடு மூலம் சமச்சீர் வளர்ச்சியை கொண்டு வந்து இந்திய திருநாட்டில் தமிழகத்தை முதல் மணியிலமாக தொழில் புரட்சியை உருவாக்கியவர். குளறுபடியின் அடையாளமாக இருக்கின்ற திமுக அரசு ஒட்டுமொத்த தென் தமிழகத்திலும் ஆறு லட்சம் கோடியில் எந்த ஒரு முதலீட்டு வரியும் செய்யவில்லை.

மதுரை தூத்துக்குடி எக்கனாமிக் காரிடார் என்று சொல்லக்கூடிய சாலைப் பகுதியில் எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. திமுக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதியாக அளித்த தென் தமிழகத்திற்கு அளித்த வாக்குறுதிகளை பெற்று தர வேண்டும் இன்றைக்கு கலைஞர் பெயரில் நூலகம் அரங்கம் உள்ளிட்ட பல்வேறு திறப்பு விழா நடைபெறுகிறது அதனால் எந்த ஒரு பயனும் இல்லை.

வருகின்ற காலங்களில் தொழில் வழித்தடத்தை முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனக்கு கோரிக்கை விடுத்தார். மீண்டும் முதல்வராக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொறுப்பேற்று தென் தமிழக மக்களின் வளர்ச்சிக்கும் மதுரை தூத்துக்குடி வழிதடத்தினை மேம்படுத்துவார் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.

முழு வீச்சில் தேர்தல் களத்தில் தேர்தல் வியூகங்களை வகுப்பதில் பணியாற்றுவதில் கழகப் பொதுச் செயலாளர் முதன்மையாக நின்று பணியாற்றி வருகிறார். உரிய விசாரணை நடக்க வேண்டும் என்பதுதான் அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது விசாரணை செய்து முழுமையான விவரங்களை மக்களை தெரியப்படுத்த வேண்டும் பொறுப்பும் கடமை காவல்துறைக்கு உள்ளது காவல்துறையினர் முதல்வர் கையில் உள்ளது பாரபட்சம் இன்றி விசாரணை நடத்த வேண்டும்.

ஜல்லிக்கட்டு போட்டியில் நியாயத்தை கேட்பதற்கும் இந்த அரசு காது கொடுத்து கேட்பதற்கோ விசாரணை செய்வதற்கோ கேட்பதில்லை இன்றைக்கு சர்வாதிகாரம் ஜனநாயகம் என்றால் இன்றைக்கு அழைத்து விசாரணை செய்து உரை நடவடிக்கை எடுக்க வேண்டும் இதற்கு முன்பு நடைபெற்றது உணர்வுபூர்வமான ஜல்லிக்கட்டு. ஆனால் வருகின்ற 24 வது தேதி நடைபெற உள்ளது பொம்மை ஜல்லிக்கட்டு

Tags:    

Similar News