70 நிலையங்களில் 5.49 கோடி கிலோ நெல் கொள்முதல் மகிழ்ச்சி

காஞ்சிபுரம் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழத்தின் வாயிலாக, 70 நிலையங்களில் 5.49 கோடி கிலோ நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-07 16:56 GMT

நேரடி நெல்கொள்முதல் நிலையம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து தாலுகாக்களில், 1.50 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இதில், சம்பா பருவத்தில், 32,110 ஏக்கர் மற்றும் நவரை பருவத்தில், 51,870 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன. சம்பா பருவத்தில் சாகுபடி செய்த நெல், மார்ச் மாதம் அறுவடை முடிந்துள்ளது. நவரை பருவத்தில், சாகுபடி செய்த நெல், ஏப்ரல், மே மாதம் துவக்கத்தில் அறுவடை முடிவடையும் தருவாயில் உள்ளது.

சம்பா மற்றும் நவரை பருவத்திற்கு சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்கு, நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலமாக, 1 கிலோ சன்ன ரக நெல்லுக்கு, 23.10 ரூபாய். பொது ரக நெல்லுக்கு, 22.65 ரூபாய் வழங்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், சம்பா, நவரை பருவத்திற்கு அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்வதற்கு, 70 இடங்களில் அரசு நேரடி கொள் முதல் நிலையங்கள் துவக்கப்பட்டு உள்ளன. இதில், 37 நேரடி கொள்முதல் நிலையங்கள் நுகர்பொருள் வாணிப கழக கட்டுப்பாட்டிலும், 33 தேசிய நுகர்வோர் கழக கூட்டமைப்பு நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் செய்யப்படுகின்றனர்.

Tags:    

Similar News