தொடர் விபத்து: புத்தேரி 4 வழிச்சாலை சந்திப்பில் சீரமைப்பு

தொடர் விபத்துகள் ஏற்படும் புத்தேரி 4 வழி சாலையில் தடுப்புகள் போடப்பட்டு 2 போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2024-05-09 03:17 GMT
புத்தேரி சாலையில் பராமரிப்பு பணிகள்

கன்னியாகுமரி மாவட்டம் புத்தேரி நான்கு வழி சாலை சந்திப்பில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் கான்கிரீட் போடப்படாமல் ஜல்லிகள் போட்டு சாலை கரடு முரடாக காணப்பட்டது. இந்த வழியாக திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலி  செல்லக்கூடிய கனரக வாகனங்கள் டாரஸ் லாரிகள் அனைத்தும் இந்த வழியாக வந்து செல்வது வழக்கம்.      

இதனால் அந்த இடத்தில் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த விபத்துகளில் அடுத்தடுத்து இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். எனவே புத்தேரி நான்கு வழி சாலை சந்திப்பில் விபத்து தவிர்ப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து போராட்டங்களும் நடைபெற்றன.  அதன் அடிப்படையில்,  தற்போது புத்தேரி நான்கு வழிச்சாலையில் கரடு முரடாக இருந்த சாலைகளை மண் போட்டு சீரமைக்கப்படுகிறது. மேலும் விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில் பேரிகார்டுகளும் வைத்துள்ளனர்.

மேலும்  இந்தப் பகுதியில் வாகனத்தின் வேகனத்தை கட்டுப்படுத்த உயர்ந்த அளவில் வேகத்தடைகள் வைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்து இருக்கிறார்கள். தற்போது இந்த பகுதியில் வாகனத்தை ஒழுங்குபடுத்த டிராபிக் போலீசார்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News