புதிய தமிழகம் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
கல் குவாரி டெண்டர் பிரச்சனையில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புதிய தமிழகம் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.;
Update: 2023-11-05 03:20 GMT
ஆட்சியரிடம் மனு
பெரம்பலூர்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர் அருண்குமார் தலைமையில், அக்கட்சியினர், மாவட்ட ஆட்சியர் கற்பகத்தை சந்தித்து மனு அளித்தனர். அதில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலகத்தில் அத்து மீறி நுழைந்து அரசு அலுவலகத்தை சூறையாடி அரசு அலுவலர்கள், மற்றும் போலீசார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். என கூறப்பட்டிருந்தது.