குவாரி விவகாரம்: குடும்பத்தினர் மீது எம்எல்ஏ சகோதரி புகார்

குவாரி முறைகேடு தொடர்பாக திருப்பரங்குன்றம் சேர்மன் புகார் அளித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-04-05 12:26 GMT

புகார் அளிக்க வந்த சேர்மன்

மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் சாலையில் மூலக்கரை வசிக்க கூடிய முன்னாள் திருப்பரங்குன்றம் பேரூராட்சியாக இருந்த காலத்தில் சேர்மனாக இருந்தவர் காந்திமதி. இவருக்கு மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடகரை புதூர் என்கின்ற கிராமத்தில் கல்குவாரி வைத்துள்ளார்.

இந்த குவாரி 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில் காந்திமதி நேற்று மாலை திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் தனது சகோதரரும்., திமுக மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினரான கோ-தளபதி மற்றும் அவரது மனைவி மகன் உட்பட மூன்று பேர் மீது புகார் அளித்துள்ளார்.

புகார் தொடர்பான காவல் துறையினர் கொடுத்த வழக்கு ஆவணத்தை பெற்றுக்கொண்ட காந்திமதி_ பத்திரிகையாளர்களிடம் கூறிய காந்திமதி._எனது குவாரிக்கு அருகில் என்னுடைய சகோதரரும் மதுரை வடக்கு சட்டமன்ற எம்எல்ஏவுமான தளபதி இடம் ஒன்றை வாங்கி அங்கு குவாரி அமைக்கப் போவதாக தகவல் வந்ததாகவும்.,

இது தொடர்பாக தனது சகோதரர் தளபதியுடன் காந்திமதி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதற்கு அவர் முறையான பதிலளிக்கவில்லை என்றும்., இதனால் 10 நாட்களாக எதுவும் பேசாமல் ஒதுங்கி இருந்ததாகவும், இந்நிலையில் நேற்று தனது சகோதரர் தளபதி தன்னை பேச்சு வார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடுத்ததாக கூறினார்.

தொடர்ந்து., தானும் தனது மகள் மற்றும் தனது மூத்த சகோதரியின் மகனுடன் தனது அண்ணன் கோ-தளபதி வீட்டுக்கு சென்று தனக்கு வாழ்வாதாரமே இந்த குவாரி தான். எனக்கு அருகிலேயே குவாரி அமைத்தால் என்னுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என பேசிக் கொண்டிருக்கையில்., திடீரென தளபதியின் மகன் அன்பு (எ) துறை கோபால்சாமி தகாத வார்த்தைகள் பேசி தன்னை அடிக்க வந்ததால் தனது மகள் தடுக்க முயன்ற போது அவரை அடித்ததாகவும்.,

அதனை கண்ட தனது சகோதரி மகன் தாக்குதலை தடுத்து நிறுத்த முயன்ற போது அவரையும் தாக்கியதாகவும், இருவரையும் அடித்ததால் சண்டையை சமாதானப்படுத்த முயன்ற போது தளபதியின் மனைவி அண்ணன் மனைவி சாவித்திரி என்கின்ற வீரலட்சுமி தனது இடது கையில் கடித்து காயப்படுத்தியதாகும் இதை அறிந்த தனது ஓட்டுநர் தங்களை காப்பாற்றி அழைத்து வந்தனர்.

தந்தை இல்லாததால் தனது சகோதரனை தந்தையாக கருதிய நிலையில் அவர் குடும்பத்தினரே ஆளும் கட்சி எம் எல் ஏ தளபதியின் கண் முன்னால் தன்னை தாக்கியது மனவேதனையாக இருப்பதாகவும்., இதனால் தனக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக எம்எல்ஏ தளபதி அவரது மனைவி மற்றும் மகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக தெரிவித்தார்மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கட்சி தலைமைக்கும் தகவல் தெரிவித்துள்ளதாகவும்,

திமுக தலைமை உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளதாகவும் காந்திமதி தெரிவித்தார். இந்நிலையில் காந்தி மதியின் புகாரை பெற்றுக் கொண்ட திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை மேற்கொண்டு தளபதியின் மனைவி சாவித்திரி அவரது மகன் துரை கோபால்சாமி உட்பட இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குவாரி விவகாரம் தொடர்பாக எம்எல்ஏ அவரது சகோதரிக்கு இடையே நடைபெற்ற தகராறு எம்எல்ஏ உட்பட குடும்பத்தினர் மூன்று பேர் மீது பாதுகாப்பு கோரி சகோதரியே காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் திருப்பரங்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News