பொள்ளாச்சியில் முயல் வேட்டை: 10பேர் கைது
காட்டு முயல்களை வேட்டையாடிய 10 பேரை கைது செய்து ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த பொள்ளாச்சி வனத்துறையினர்.
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட கள்ளிப்பட்டி, கணக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் காட்டு முயல்களை வேட்டையாடப்படுவதாக பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் வனச்சரகர் புகழேந்தி தலைமையில் வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கள்ளிப்பட்டி, கணக்கம்பட்டி பகுதியில் உள்ள வயல்வெளி ஓரங்களில் உருளைக்கம்பு,
உளி கம்பிகளை வைத்து முயல்களை வேட்டையாடிய 10 நபர்களை கையும் களவுமாக வனத்துறையினர் பிடித்தனர். மேலும் காட்டு முயல்களை வேட்டையாடுவது வன உரிமை சட்டம் 1972 குற்றமாகும் என்பதால் வேட்டையில் ஈடுபட்ட பத்து நபர்களுக்கும் ஒரு நபர் மீது தல 10,000 ரூபாய் எனவும் 10 நபர்கள் மீது ரூபாய் ஒரு லட்சம் வனத்துறையினர் அபராதம் விதித்து இனிமேல் இது போன்ற தவறுகளில் ஈடுபட மாட்டோம் என எழுத்து வாக்கும் மூலம் வாங்கிய பின்பு கைது செய்தவர்களை விடுவித்தனர்.