வெறிநாய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
நத்தம் அருகே மூங்கில்பட்டியில் வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
Update: 2024-02-17 08:22 GMT
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே செல்லப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள மூங்கில்பட்டியில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடந்தது.
இதற்கு குட்டுப்பட்டி கால்நடை மருந்தக உதவி மருத்துவர் சுபலட்சுமி தலைமையில் விவசாயிகளிடம் கால்நடை, நாய்களுக்கான வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதையொட்டி அப்பகுதிகளில் உள்ள நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசிகள் போடப்பட்டது. இதில் 32 விவசாயிகள் தங்கள் நாய்களுக்கு தடுப்பூசி போட்டது உள்பட 40 நாய்களுக்கு ஊசி போடப்பட்டது. இதில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.