இராகி நேரடி கொள்முதல் நிலையம் - அமைச்சர் துவக்கி வைத்தார்
இராகி நேரடி கொள்முதல் நிலையத்தினை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தொடங்கி வைத்து பார்வையிட்டார் .;
By : King 24x7 Website
Update: 2023-12-18 16:54 GMT
இராகி நேரடி கொள்முதல் நிலையத்தினை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்
தொடங்கி வைத்து பார்வையிட்டார் .
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கட்டட வளாகம், வண்ணாத்திப்பட்டியில் விவசாயிகளிடமிருந்து ராகி நேரடி கொள்முதல் நிலையத்தினை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார் .உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் முனைவர்.பழனியப்பன், இணை இயக்குநர் (வேளாண்மை) வி.கிருஷ்ணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் தேன்மொழி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) குணசேகரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் நா.செல்வராஜ், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ரா.கவிதா உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் உள்ளனர்.