சீறிப்பாய்ந்த காளைகள் - சிதறி ஓடிய காளையர்கள்
சங்ககிரி அருகே இடங்கணசாலையில் நடந்த எருதாட்டத்தில் சீறிப்பாய்ந்த காளைகளுடன் இளைஞர் ஆர்வத்துடன் விளையாடினர்.
Update: 2024-01-18 01:56 GMT
சேலம் மாவட்டம் , சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட இடங்கணசாலை நகராட்சி தப்பக்குட்டை கிராமம், காளிங்கனூர் பகுதியில் உள்ள சக்தி விநாயகர் திருக்கோயிலில் தை திருநாள் காணும் பொங்கலை முன்னிட்டு எருதாட்டம் விழா நடைபெற்றது. இந்த எருதாட விழாவில் 30 க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இதில் சீறிப்பாய்ந்து வரும் காளைகளுடன் இளைஞர்கள் ஆர்வத்துடன் விளையாடி வந்தனர். இந்த எருதாட்ட விழாவில் காளிங்கனூர் ,கருப்ப கவுண்டனூர் மற்றும் இதனை சுற்றியுள்ள ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு விளையாடி வந்தனர். இந்த எருதாட்ட விழாவிற்கு மகுடஞ்சாவடி காவல் நிலையத்தின் சார்பில் பலத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.