ரயில் மறியல் போராட்டம்!

வாணியம்பாடி ரயில் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்!

Update: 2023-12-20 12:24 GMT

ரயில் மறியல் போராட்டம்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

நாடாளுமன்றத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் திமுக , திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வாணியம்பாடியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர், பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்துச்சென்றனர்...

Tags:    

Similar News