ரயில்வே கேட் உடைந்து ரயில்கள் நிறுத்தம் - பயணிகள் அவதி

செங்கல்பட்டு அருகே லாரி மோதியதில் ரயில்வே கேட் உடைந்து ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தத்தால் பயணிகள் அவதி.

Update: 2024-03-08 11:17 GMT
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் ஒரகடம் சாலை இணைப்பில் ரயில்வே கேட் உள்ளது. இந்நிலையில் இன்று காலை விழுப்புரத்தில் இருந்து இருங்காட்டுக்கோட்டை சுக்காட்டிற்கு செல்வதற்காக லாரி ஒன்று சென்று கொண்டிருக்கிறது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை லாரி ரயில்வே கேட் மீது உரசியது இதில் ரயில்வே கேட் சேதமடைந்து பாதையில் விழுந்தது. இதன் காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களும், செங்கல்பட்டில் இருந்து சென்னை நோக்கி செல்லும் அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும், லாரி மோதியதில் சேதமடைந்த ரயில்வே கேட்டினை சீர் செய்யும் பணியில் ரயில்வே துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி மந்தகதியிலேயே நடைபெற்று வருகின்றன. இந்த மேம்பால பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் மட்டுமே அடிக்கடி இது போன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் இருக்கும் என பொதுமக்களும் பயணிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

Similar News