ரயில் நிலைய விரிவாக்கப் பணி - கோவிலை மறைக்க எதிர்ப்பு

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தில் நடைபெற்று வரும் விரிவாக்கப் பணியில் விநாயகர் கோயிலை மறைத்து நுழைவு வாயில் கட்டும் பணிக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Update: 2024-04-26 04:02 GMT

கோயிலை மறைத்து கட்டபடும் நுழைவு வாயில்

மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் ரூ.21 கோடி மதிப்பீட்டில் ரயில் நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக ரயில் நிலையத்தின் முன்பு பிரமாண்ட முகப்பு அமைக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்திற்கு மிக அருகில் 70 வருட பழமையான மகா கணபதி கோயில் உள்ளது.

இந்த நுழைவு வாயில் கட்டப்பட்டால் கோயிலுக்கு வந்து செல்வதற்கு பக்தர்கள் சிரமம் ஏற்படும் என அப்பகுதிவாசிகள் சிலர் தெரிவித்தனர். இதையடுத்து, பாஜக மாவட்ட துணைத் தலைவர் மோடி.கண்ணன் அங்கு சென்று நுழைவுவாயில் அமைக்கும் பணியினை பார்வையிட்டார். இதுகுறித்து, ரயில்வே நிர்வாகத்திடம் கேட்டபோது உரிய பதில் கிடைக்காததால், அந்த நுழைவு வாயிலை பக்தர்களின் நலன் கருதி வேறொரு இடத்தில் மாற்றிக் கட்ட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

Tags:    

Similar News