பென்னாகரம் சுற்றுவட்டார பகுதியில் விடிய விடிய கனமழை
பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.;
Update: 2024-05-11 04:05 GMT
மழை
தமிழகம் முழுவதும் தற்போது கோடை காலம் நிலவி வரும் நிலையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் தினந்தோறும் 100 டிகிரி தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது இதன் நிலையில் வெப்ப சலனம் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சில தினங்களாக கனமழை பொழிந்து வரும் சூழலில் நேற்று இரவு தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏரியூர், ஒகேனக்கல், பெரும்பாலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து வெள்ளம் போல் ஓடியது. இரவு முழுவதும் பெய்த கன மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவானதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் மேலும் கன மழையால் பல்வேறு இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.